தாங்கவியலா இரைச்சலாய் உன் தனிமை தகிக்கிறது
தனிமையை நீ விரும்பினால் என்னோடு தனித்திரு.
கோபம் வந்ததென்றால் என்னைக் குதறிவிடு.
வருத்தம் வந்துவிட்டால் என்னிடமே கொட்டிவிடு
மெளனம் மட்டுமே விருப்பமென்றால்
அமர்ந்திரு என்னுடன் அமைதியாக
புறக்கணிப்பு என்பதை என்னிடமா காட்டுவது?
ஆயிரம் கைகள் கொண்ட என்னிடம் உள்ள நீ
தண்ணீராய் மாறி நழுவினால் கூட
கடலான என்னுள் கலந்திடவே வேண்டும் நீ.
கடலான என்னுள் கலந்திடவே வேண்டும் நீ.
புரியாமல் நீ மேலே ஆவியாகப் பார்த்தாலும்
வானமான என்னுள்ளே
வசப்படவே போகின்றாய்
வானமான என்னுள்ளே
வசப்படவே போகின்றாய்
எல்லாம் அறிந்து நீ என்னிடம் அமைதிகொள்
எனைப்பிரிய உனக்கிங்கு ஏதும் வழியில்லை.
/ தாங்கவியலா இரைச்சலாய் உன் தனிமை தகிக்கிறது
ReplyDeleteதனிமையை நீ விரும்பினால் என்னோடு தனித்திரு.
கோபம் வந்ததென்றால் என்னைக் குதறிவிடு.
வருத்தம் வந்துவிட்டால் என்னிடமே கொட்டிவிடு
மெளனம் மட்டுமே விருப்பமென்றால்
அமர்ந்திரு என்னுடன் அமைதியாக /
மித்ரா அருமை.. எனக்கு இந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு...
சரி, யாரை மிரட்டுகிறீங்க ? :)
வினோ
ReplyDeleteரொம்ப நன்றிங்க வினோ.
யாரையும் மிரட்டலைங்க :-):-).
Piriyatha varam...
ReplyDeleteIppadiyumaa... :-)
சிந்தியா
ReplyDelete:-)நன்றிங்க.
ம்ம்ம் இப்படியும்தான்.
இது வரமா சாபமா எனக் குழப்பமும் கூட.
நல்லா இருக்குங்க மித்ரா., போக வழிவிடாம இருக்கமா பிடிச்சிக்கோங்க.. :)
ReplyDelete(மித்ரா உங்கள் பதிவுகளை திரட்டிகளில் இணைக்கவும். நன்றி..)
சிவாஜி சங்கர்
ReplyDelete:-) :-)நன்றிங்க.
//போக வழிவிடாம இருக்கமா பிடிச்சிக்கோங்க..// :)ம்ம்ம் சரிங்க.