பத்து விரல்களையும் இறுகக்கூட்டி
கூடு போலமைத்த உள்ளங்கை சிறையின்
வெற்றிடத்தினுள் குதித்தாடிக்கொண்டும்
ஊர்ந்து சென்றுகொண்டும் உள்ளேயே
பறந்து கொண்டும் குட்டிப்பொன்வண்டு
சுற்றிவர சிறுமி சிரித்துக் கொண்டிருக்க
முரட்டு விரல்கள் சின்ன விரல்களைப்
பிரித்தெடுத்துப் பொன்வண்டை விடுவிக்க
பறந்து போன வண்டு மீண்டும் குட்டிப்
பூவிரலில் வந்தமர்ந்து கொண்டது
முரட்டுவிரல்கள் திகைத்துத்
தலையிலடித்தபடி போயின.
சுநந்தா
கூடு போலமைத்த உள்ளங்கை சிறையின்
வெற்றிடத்தினுள் குதித்தாடிக்கொண்டும்
ஊர்ந்து சென்றுகொண்டும் உள்ளேயே
பறந்து கொண்டும் குட்டிப்பொன்வண்டு
சுற்றிவர சிறுமி சிரித்துக் கொண்டிருக்க
முரட்டு விரல்கள் சின்ன விரல்களைப்
பிரித்தெடுத்துப் பொன்வண்டை விடுவிக்க
பறந்து போன வண்டு மீண்டும் குட்டிப்
பூவிரலில் வந்தமர்ந்து கொண்டது
முரட்டுவிரல்கள் திகைத்துத்
தலையிலடித்தபடி போயின.
சுநந்தா
சில நேரங்களில் நேசத்தின் இருப்பிடம் பெரியவர்களுக்கு தெரிவதில்லை மித்ரா...
ReplyDeleteநலம் தானே சகோ?
வினோ
ReplyDeleteஉண்மைதான் வினோ. :-) நலம் வினோ.
வருகைக்கும் கருத்துக்கும் நலம் விசாரிப்புக்கும் நன்றிங்க.
பல நேரங்களில் பிறருக்கு சிறை போல் தெரிவது , உண்மையிலேயே சிறையாய் இருப்பதில்லை. நன்றாய் சொல்லி இருக்கிறீர்கள் மித்ரா
ReplyDelete