Wednesday, June 2, 2010

சொல்லிக்கொடுக்கப்பட்டது. 1

அடுக்கிவைக்கப்பட்ட சீட்டுக் கட்டுக் கோபுரத்தை
மகள் அதிசயமாகப் பார்க்க அவள் அழகாகக் கட்டினாள்
கட்டி முடித்துக் கைதட்டி மகிழ்ந்தார்கள்
சிறுமிக்குப் பொறுமையும் கவனமும் சொல்லிக்கொடுக்கப்பட்டது
பக்கத்து வீட்டுச் சிறுவன் ஒடிவந்து சரேலெனத்தட்டிவிட்டான்
பொலபொலவென விழுந்தது மாளிகை
கலைக்கும் யாரையும் அவளுக்குப் பிடிப்பதில்லை
சின்னக் குழந்தையாயினும் பெரியவராயினும்.
அப்படியே அவனை அமரவைத்து
“எழுந்து போனால் பின்னிவிடுவேன்” என மிரட்டி
அதைவிடப் பெரிய மாளிகையை
அவனைப் பார்க்கவைத்துக்கொண்டே கட்டினாள்.
“இதையும் நீ உடைத்தால் காலைவரை இங்கேதான்
உட்கார்ந்திருக்க வேண்டும் இதை விடப் பெரிதாகக்
கட்டிக்கொண்டு இருப்பேன்” என்றாள்.
சிறுவன் கட்டி முடிக்கப்பட்டதைக் கவனமாகப் பார்த்து
இரண்டடி எச்சரிக்கையுடன் பின்னால் சென்று
மெதுவாகக் கதவு திறந்து வெளியேறினான்
இப்போதும் சிறுமிக்கு
ஏதோ ஒன்று தெளிவாகச் சொல்லிக்கொடுக்கப்பட்டது.

சுநந்தா

10 comments:

  1. Sivaji Sankar
    :-) Thank you.

    ReplyDelete
  2. அழகாக வடிவமைக்கப்பட்ட வார்த்தைகள்...மிக்க நன்று தோழி...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அருமைங்க நண்பரே

    ReplyDelete
  4. Vijay

    நன்றிங்க.

    ReplyDelete
  5. பாலா

    நன்றி பாலா.

    ReplyDelete
  6. //“இதையும் நீ உடைத்தால் காலைவரை இங்கேதான்
    உட்கார்ந்திருக்க வேண்டும் இதை விடப் பெரிதாகக்
    கட்டிக்கொண்டு இருப்பேன்” என்றாள்//

    I loved this one. Great.

    Ashwinji
    www.frutarians.blogspot.com

    ReplyDelete
  7. Ashwinji

    Thank you very much.:-)

    ReplyDelete
  8. /கலைக்கும் யாரையும் அவளுக்குப் பிடிப்பதில்லை
    சின்னக் குழந்தையாயினும் பெரியவராயினும்./

    /ஏதோ ஒன்று தெளிவாகச் சொல்லிக்கொடுக்கப்பட்டது. /
    மித்ரா நன்று... மிக்க நன்றி கவிதைக்கு...

    ReplyDelete
  9. வினோ

    :-) நன்றிங்க வினோ.

    ReplyDelete