கையைப் பற்றியபடி ஓடி வந்துகொண்டிருந்த
என்னைக் கூட்டத்தில் உதறிவிட்டு நமக்கிடையில்
இடைவெளி விட்டுத் தூரத்தில் நடக்கிறாய்.
எப்படியும் இந்தப் பாதையில் நடந்து விடுவேன்
எனும் நம்பிக்கையும் உனக்கு உள்ளது போலும்..
அவ்வப் போது திரும்பிப் பார்த்து வருகிறேனா எனக்
கவனத்துடன் உன் கண்கள் என்னைப் பார்க்கின்றன.
அய்யோ என்னால் முடியவில்லை எனக்
குரல் கொடுத்தால் நிற்பாய் நீ எனக்குத் தெரியும்
ஆனால் நான் மாட்டேன்.
உடைந்த காலும் நொருங்கிய நெஞ்சும்
ரணமான இதயமும் கதறச் சொன்னாலும்
திரும்பிப் பார்க்கும் உன் கண்களிடம்
என் கண்கள் மட்டும் "நான் நலம் நீ நட"
என இனி எப்போதும் பொய்யாகச் சிரிக்கும்
கையைப் பற்றியபடி ஓடி வந்துகொண்டிருந்த
என்னைக் கூட்டத்தில் உதறிவிட்டு நமக்கிடையில்
இடைவெளி விட்டுத் தூரத்தில் நடந்து செல்லுமுன்
யோசித்திருக்க வேண்டும் நீ.
சுநந்தா

/ என் கண்கள் மட்டும் "நான் நலம் நீ நட" /
ReplyDeleteஇது அழகு... அவன் மீது இருக்கும் தீரா அன்பு..
நன்றி மித்ரா...
வினோ
ReplyDeleteரொம்ப நன்றிங்க :-)