உடைக்கிறான் அழகான முழுமையான கல்லை
உளியைவைத்துக் கொஞ்சம் கொஞ்சமாக
உருவம் தருகிறானாம் உயிர் தருகிறானாம்
வலியில் கதறும் கல்லைப் பொருட்படுத்தாமல்
கலைஞனாம்.. சிற்பியாம்.
நான் செதுக்கி முடித்ததும் உன்னைக்
கண்டு ஊரே வியக்கும் அழுது கரையாதே
எனச் சொல்லித்தொடர்ந்து செதுக்குகிறான்
பாறை அழிந்து சிற்பமான பின்னர்
பெருமைப்பட்டுக் கொள்ள பாறைக்கென்ன இருக்கும்?
சுநந்தா
உளியைவைத்துக் கொஞ்சம் கொஞ்சமாக
உருவம் தருகிறானாம் உயிர் தருகிறானாம்
வலியில் கதறும் கல்லைப் பொருட்படுத்தாமல்
கலைஞனாம்.. சிற்பியாம்.
நான் செதுக்கி முடித்ததும் உன்னைக்
கண்டு ஊரே வியக்கும் அழுது கரையாதே
எனச் சொல்லித்தொடர்ந்து செதுக்குகிறான்
பாறை அழிந்து சிற்பமான பின்னர்
பெருமைப்பட்டுக் கொள்ள பாறைக்கென்ன இருக்கும்?
சுநந்தா
/ வலியில் கதறும் கல்லைப் பொருட்படுத்தாமல்
ReplyDeleteகலைஞனாம்.. சிற்பியாம். /
ஏதன் மீதான கோபம் தோழி?
ஒன்றை இழக்காமல் வேறு கிடைப்பதில்லையே?
நல்ல கவிதை..
வினோ
ReplyDelete:-) நன்றிங்க வினோ.
இழப்பது வேறு. இது அழிப்பதைப் போலத் தோன்றியதால் அப்படி எழுதியிருக்கிறேன்.