வழுக்கிக் கொண்டு நிதம் எழும் சூரியன் போல எவ்வளவு இயல்பாக சுலபமாக மனிதர்களின் நிறம் மாறுகிறது! எவ்வளவு மாற்றங்கள்!!
உன்னுடய மாற்றம் என்னையும் மற்றவரையும் சேர்த்துப் பாதிக்கும்
என்பதும் அது அடுத்ததையும் மற்றவைகளையும் பாதிக்கும் என்பதும் உனக்குத் தெரியாதா? அல்லது தெரிந்தும் எதும் செய்ய இயலாத நிலைமையா?
உன்னை சொல்லி என்ன செய்ய? உன்னுடைய மாற்றமே உனக்கு அப்படி வேறொன்றினால் ஏற்பட்ட மாற்றம் காரணமானதாகத்தான் இருக்க வேண்டும். சின்னக் கல் விழுந்த குளம் கூட இயல்பில்
மாறிப்போய் விடுகிறதே. நாடகத்தில் காட்சிகள் மாறுவது கூட ஒரு திட்டமிட்ட ஒழுங்கான அமைப்பில்.. ஆனால் வாழ்க்கையோ
சரசர என ஓடிப் பொலபொலவெனக் கொட்டிக்கொண்டே இருக்கும் அருவி போல மாற்றங்கள் மட்டுமே நிறைந்த கணங்களுடன்..
காட்சிகள் மாறிக்கொண்டே இருக்கும் இந்தக்கணத்தில் ஏற்கனவே நடந்தவைகளுக்கு அருகாமையிலாவது ஒரு காட்சி அமையட்டுமென எதிர்பார்த்துக்கொண்டு..சுநந்தா

No comments:
Post a Comment