Monday, August 30, 2010

பட்சியும் பாம்பும்

கொட்டிய மழை வெள்ளத்தில்
அதல
பாதாளத்தில் மாட்டின
அவளதுசெல்லப்
பிராணிகளான
சின்னப்
பட்சியும் பாம்புக்குட்டியும்.
மெல்லக்
கவிழ்ந்து
கண்சுருக்கிப்
பார்த்தபோது
உடலெல்லாம் சிராய்ப்பாக ரத்தம் வழியக்
கிடைத்ததைப்பற்றி
ஏறும் பாம்பும்
எழமுடியாது
என முடிவெடுத்துக்
கண்மூடிப்
படுத்திருந்த பட்சியும்....
உதடுசுழித்துக்
கவலைப்பட்டு
மிகமிகச்
சிரமப்பட்டு
வெளியிலெடுத்தாள்
பட்சியை.
அதற்குள்
தானாகவே மேலேறிய
குட்டிப் பாம்பைத் திரும்பிப் பார்த்தாள்.
மெல்ல அதைக் கையிலெடுத்து
அன்பு முத்தமொன்று இட்டு
"காத்திரு" எனச்சொல்லிக் குழியில்வீசிப்
பட்சியுடன் பறந்து விட்டாள்மீண்டும் குழியில் விழுந்தபாம்பு
அவளது
செய்கையால் அதிர்ந்துபோய்
அப்படியே
செத்தது.
சுநந்தா

4 comments:

  1. நல்ல இருக்கு மித்ரா... பயமா இல்லை வெறுப்பா இல்லை தேவையின்மையா ?

    ReplyDelete
  2. வினோ
    ரொம்ப நன்றிங்க.
    //பயமா இல்லை வெறுப்பா இல்லை தேவையின்மையா ? // தெரியலைங்க. அவள் செய்தது அந்தக் குட்டிப் பாம்பால் தாங்கிக்கொள்ளவே முடியாத ஏதோ ஒன்று.

    ReplyDelete
  3. சில விசயங்கள் தாங்கிக்கொள்ள முடியாது தாங்க... அது பாம்பா மனிதனா.. வித்தியாசம் ஒன்னும் இல்ல மித்ரா...

    ReplyDelete
  4. வினோ
    :-) ஆமாம். சரியாகச் சொன்னீர்கள். நன்றிங்க வினோ.

    ReplyDelete