Wednesday, November 25, 2009

மெளனமொழி போதும்

உன்னைக் குதறிவிட்டு வலியோடு
அமர்ந்திருக்கிறேன்
பேசாமலே இருந்து விடலாம் என்றும்
பேச்சுகளற்ற மெளனத்துடன்
அருகிருந்தால் போதுமென்றும்
அதைவிட பேசாமல் பார்க்காமல்
இருப்பை உணர்த்த வேறுவழி
இருந்தால் நல்லது என்றும்
நினைத்துக் கொண்டு
நீயும் ஏறக்குறைய எனது
மனநிலையில்தான்
என்னுடன் பேசுமுன்
இருந்தாய் எனத் தெரியும்
அப்படியும் பேசியதால்
உன்னைக் குதறிவிட்டு வலியோடு
அமர்ந்திருக்கிறேன்

 

சுநந்தா

2 comments:

  1. உன்னைக் குதறிவிட்டு வலியோடு
    அமர்ந்திருக்கிறேன்// :)

    ReplyDelete
  2. Sivaji Sankar
    :-) Thanks.

    ReplyDelete